தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிரிக்கெட்டை புறக்கணிப்போம்! நடத்தப்பட்ட கவனயீர்ப்பு ஒன்று கூடல்
அவுஸ்ரேலியா - சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னால் ’தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிரிக்கெட் விளையாட்டை புறக்கணிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு Sydney SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கெட் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பை தொடர்பில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாங்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்ற போது விளையாட்டு வேறு போராட்டம் வேறு, அரசியலை விளையாட்டோடு கலக்காதீர்கள் என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் சிறிலங்காவை பொருத்தளவில் இந்த விளையாட்டு கிரிக்கெட் துடுப்பாட்டமே இன படுகொலையை பயங்கரமாக மறைத்து நிக்கின்றது. ஒரு கவனத்தை ஏற்படுத்துவதற்காக இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
