விடுதலைப் புலிகளுடன் போரிட்ட மகிந்தவின் பரிதாப நிலை - ஆருடம் கூறும் மொட்டு
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "கொழும்பில் (Colombo) இருந்து வெளியேறி தங்காலை - கால்டன் இல்லத்துக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்குள்ள மக்களுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
அரசால் தடுத்து நிறுத்த முடியாது
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அவரைச் சந்திக்க வருகின்றனர். இந்த அரசு விரும்பியவாறு மகிந்த ராஜபக்ச தற்போது அரச மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார்.
அவர் அரச மாளிகையில் தங்கி இருப்பதுதான் பெரும் பிரச்சினையாக அரசு காண்பித்தது. எனவே, தற்போது மக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியாது.
மக்களிடமிருந்து மகிந்த ராஜபக்சவைப் பிரிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச மக்களின் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
