யார் தலைவரானாலும் யாப்பினை மீற கூடாது! வழக்கு தாக்கல் செய்தவர் கூறிய விடயம்

Sri Lankan Tamils Jaffna TNA Tamil ITAK
By Shadhu Shanker Feb 17, 2024 02:22 PM GMT
Report

தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (16) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசு கட்சியின் யாப்பினை மீறியமை தொடர்பாக நீதிமன்றத்தினை நாடியிருந்தேன்.

இரு துருவமாகும் தமிழரசுக் கட்சி: சர்வேஸ்வரன் விசனம்!

இரு துருவமாகும் தமிழரசுக் கட்சி: சர்வேஸ்வரன் விசனம்!

இலங்கை தமிழரசுக் கட்சி

இது தொடர்பாக என்னால் யாழ் நீதிமன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய 17 ஆவது மாநாடும் அதனை ஒட்டிய பொது சபையையும் 14 நாட்களுக்கு தடையுத்தரவினை பெற்றிருந்தேன்.

itak tamils

இது கட்சிக்கு எதிரானதல்ல கட்சியின் யாப்பினை மீறியமைக்காவே தடையுத்தரவினை பெற வேண்டியிருந்தது. ஒரு மாநாட்டினை எங்கு கூட்டுவது, எந்த நேரத்தில் கூட்டுவது என்பது தொடர்பான முழு அதிகாரமும் மத்திய செயற்குழுவிற்கு மட்டுமே உள்ளது.

ஆனால் நான்கு, ஐந்து பேர் இணைந்து கட்சியினை தவறாக வழிநடத்துவதற்கும் தாங்கள் நினைத்ததனை மாற்றி அமைப்பதற்காகவும் மாநாட்டினை நடாத்த அழைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றத்தில் வழக்கு

ஆகவே நான் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் வினாவியிருந்தேன் அதற்கு பதில் கிடைக்கவில்லை. அதேபோல் ஒரு மாநாடு வைக்க வேண்டுமாக இருந்தால் மத்திய செயற்குழு தான் ஏற்பாடு செய்கின்ற முழு பொறுப்பும் இருக்கின்றது.

itak tna

கட்சியினுடைய உயர்மட்ட குழு கூடாமல் மாநாட்டினை கூடுவதென்பது கட்சியினுடைய யாப்பினை மீறும் செயற்பாடாகும். அதனடிப்படையிலே இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தேன். இதேபோல் 2022 ஆம் ஆண்டு என்னை கட்சியிலிருந்து நீக்க முற்பட்டிருந்தார்கள்.

அதனையும் நான் சவாலுக்குட்படுத்தி யாழ் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்திருந்தேன். அவ் வழக்கு தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அன்றும் நான் வழக்கு தொடர்ந்ததற்கு காரணம் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லாமல் கட்சியிலிருந்து நீக்க முடியாது.

அதனடிப்படையிலே வழக்கினை தாக்கல் செய்திருந்தேன். யார் தலைவராக இருந்தாலும் யாப்பினை மீறி செயற்பட கூடாது என்பதனை அடையாளப்படுத்தியே இவ் வழக்கினை தாக்கல் செய்திருக்கின்றேன்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்!

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்!

தமிழரசுக் கட்சியினுடைய யாப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியினை நான் எதிர்ப்பதாகவும், எதிராக செயற்படுவதாகவும் சிலர் தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கின்றார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய யாப்பினை மீறி செயற்பட்டாலும், எந்த சந்தர்ப்பத்திலும் மீறினாலும் நீதிமன்றிற்கு சென்று தடையை பெற எங்களுக்கு உரிமை உண்டு.

itak mavai senathirajah

நீதிமன்றம் சென்றவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும், நீக்கப்படுவார்கள் என்ற கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன. நீதி கேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதாக இருந்தால் யாப்பை மீறியவர்களுக்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வியையும் எழுப்புகின்றேன்.

யாப்பை மீறியவர்களுக்கு தான் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு கட்சியிலிருந்து நீக்க வேண்டுமே ஒழிய நீதிமன்றம் சென்றதற்கு கட்சி நீக்கமோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட்டாலோ மீண்டும் நீதிமன்றம் செல்ல தயாராக இருக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

பாபா வாங்காவின் கணிப்பை நிஜமாக்கினாரா புடின்... இந்த ஆண்டில் மேலும் நடக்கப்போவது என்ன..!

பாபா வாங்காவின் கணிப்பை நிஜமாக்கினாரா புடின்... இந்த ஆண்டில் மேலும் நடக்கப்போவது என்ன..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023