இலங்கை தமிழரசு கட்சி குறித்து சாணக்கியனின் நிலைப்பாடு
தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(04) இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் எனும் நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நோக்கம்
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை தமிழரசு கட்சியானது அரசியல் தீர்வு, எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 13 மணி நேரம் முன்