இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த சம்பவத்தை காவல்துறையினர் 02.12.2025 அன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்த நிலையில் வழக்கு 28.09.2025 தவணையிடப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலையாகாத எம்.பி
குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் 16-12-2025 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது அடுத்த வழக்கு இன்று(16.01.2026 ) தவணையிடப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.
குறித்த சட்டத்தரணி குறித்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் காவல்துறை நிலையத்தில் சரணடைந்த நிலையில் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு
எனினும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் வரமுடியவில்லை க.இளங்குமரன் என தெரிவித்திருந்தார்.

கிராமசேவையாளர் சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன் காவல்துறை பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் முன்னிலையாகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என பதில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன்போது எதிர்வரும் 20.01.2026 அன்று வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் காவல்துறையினருக்கு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |