இலங்கைக்கு சட்டவிரோதமாக சிகரெட் கடத்தல் : இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு விமான பயணிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், நாற்பத்தொரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகளில் ஒருவர் பொலன்னறுவை (Polonnaruwa) பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவரெனவும் அவர் தனது உறவினரை சந்திப்பதற்காக துபாயில் இருந்து திரும்பிய போது சட்டவிரோதமாக வெளிநாட்டு உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறை
அத்தோடு, இதற்கு மேலதிகமாக துபாயில் (Dubai) கைத்தொழில் தொழிலில் ஈடுபட்டு வரும் கொழும்பு (Colombo) தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும் சட்டவிரோதமான முறையில் ஏராளமான சிகரெட்டுகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் இருவரும் சட்டவிரோதமான முறையில் 207 சிகரெட் அட்டைப்பெட்டிகளில் 41,400 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை தங்கள் பயணப் பைகளில் மறைத்து கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |