கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை
Colombo
Western Province
By Dharu
கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பத்தபெண்டியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
காலிமுகத்திடல் முதல் பொல்கொட ஆறு வரையிலான பகுதி ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி அதனை உள்ளடக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட ஆலோசனை
இதன்படி இதனை அகற்றும் செயல்முறை குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அகற்றி, அப்பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி