சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (19) சிறிலங்காவின் வடமேற்கு கடற்பரப்பில், கற்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 08 பேருடன் மீன்பிடிக்கு பயன்படுத்திய 03 படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடிக்கு கடலில் மூழ்க பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி
கடல் சூழலின் சமநிலையை சீர்குலைக்கும் விதமாக இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்கும் நோக்கில், கடற்படையானது இலங்கையைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றைய தினம் (19) சிறிலங்காவின் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி விஜயா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் சுமார் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட கருவிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும், 19 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களும், அவர்களது உடைமை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |