சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது(படங்கள்)
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Shadhu Shanker
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று(13) கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை
அதனையடுத்து, இந்திய கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்திய கடற்தொழிலாளர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்