திடீரென சுவிஸ் பயணத்தை இரத்து செய்த ஈரான் அதிபர்
உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஈரான் அதிபர் திடீரென பயணத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்ச்சி டிசம்பர் 13ஆம் திகதி முதல், 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்க இருந்த நிலையில் ஈரான் சார்பில் கலந்து கொள்ளும் குழுவின் தலைவராக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஜெனீவா செல்லவிருந்தார்.
பயணம் இரத்து
இந்நிலையில் அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார்.
ஈரான் அதிபரை கைது செய்ய அவரது எதிரணியைச் சேர்ந்த மூன்று பேர் சுவிஸ் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளதால் அவர் பயணத்ததை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் டெஹ்ரான் மாகாண அரசின் துணைத்தலைவராக இருந்தபோது, இனப்படுகொலை மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களை ஞாபகமூட்டும் உலகத்தமிழர் பேரவையின் செயல் : காணாமல் போனோரின் உறவுகள் கடும் கண்டனம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |