மாத்தறை சிறையில் சுற்றிவளைப்பு: தடை செய்யப்பட்ட பல பொருட்கள் மீட்பு!
Sri Lanka Police
Matara
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
மாத்தறை(Matara) சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தடைசெய்யப்பட்ட பல பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதனை சிறைச்சாலை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இந்த சுற்றிவளைப்பில் சிறைச்சாலையின் மூன்று அறைகளில் 19 கையடக்கத் தொலைபேசிகள், 18 மின்கலங்கள், 09 சிம்அட்டைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 07 பொதிகள் என்பன மீட்கபட்டுள்ளன.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்