தாயின் அறிவுரையால் மகிந்தவை கைவிட்ட சகா
தனது தாய் கூறிய அறிவுரையால் இம்முறை மகிந்த ராஜபக்சவை கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்ததாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(rohitha abeygunawardana) தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் மிகவும் விசுவாசியான அவர் இம்முறை அவரை கைவிட்டு எவரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மகிந்தவை விட்டுவிட்டு வீட்டுக்கு வராதே
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது இந்த முடிவிற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் கூறுகையில்,
என் அம்மாவுக்கு 87 வயது. கடந்த 2015ஆம் ஆண்டு மகனே, மிஸ்டர் மகிந்தவை(mahinda) விட்டுவிட்டு வீட்டுக்கு வராதே என்று சொல்லியிருந்தார்.
ரணிலை ஜனாதிபதியாக வெற்றிபெற செய்
ஆனால் இந்த முறை, மகனே, போய் ரணிலை(ranil) ஜனாதிபதியாக வெற்றிபெற செய்வதற்கான வேலையைச் செய்யுமாறு கூறினார். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |