சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி
Namal Rajapaksa
Pillayan
Suresh Salley
By Dilakshan
இலங்கையின் கடந்தகால அரசியலை பெரும்கேள்விகளுக்கு உள்ளாக்கியிருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் மர்ம மூளையாக இருந்ததாகக் கருதப்படும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையான் ஆகியோர் மீதான புலனாய்வு விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
ராஜபக்சாக்களின் அரசியல் மீள்வருகைக்காக இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில், நாமல் ராஜபக்சவுக்கும் சட்டப் பிடி இறுகத் தொடங்கியிருக்கிறது.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப்பட்ட கொடூரமான உண்மைகள் வெளிப்படுவது ராஜபக்ச அதிகார வர்க்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காலத்தின் கணக்குத்தீர்ப்பாக அமையும் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் தி ரிப்போர்ட்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |