யாழில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்- தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றையே கொடிகாமம் (Kodikamam) காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16.02.2025) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தியில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேம்பு, நாவல் மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட மரக்குற்றிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
