சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற ஏழு பேர் கைது...!
ஹட்டன் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற ஏழு பேர் ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக ஹட்டன் காவல்துறையினரால் கூறப்பட்டுள்ளது.
இரு வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மாணிக்க கற்களை அகன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணிக்கக்கல் அகழ்வு
நோர்வூட் காவல் பிரிவில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற போது நோர்வூட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஏனைய 6 பேரும் ரொசல்ல பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகன்ற வேளையில் ஹட்டன் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருமே நாளை (01) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |