நெல்லியடியில் சட்ட விரோத மணல் அகழும் வாகனத்தை துரத்தி சென்ற காவல்துறை
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் சட்ட விரோத மணல் அகழும் நடவடிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்ந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் துரத்தி செல்லும் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் நெல்லியடி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லியடி காவல்துறை
நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட துன்னாலை பகுதியில் நேற்று மணல் மண் ஏற்றிக்கொண்டிருப்பதாக நெல்லியடி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடமராட்சி கிழக்கில் தற்போது இரண்டு டிப்பர்கள் தலா 4 தடவைகள் சடடைவிரோத மணல் அகழ்வு விநியோகத்தில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிப்பதுடன் சட்ட விரோத மணல் மண் கடத்தலால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலுக்கு பயந்து கருத்து தெரிவிக்க மக்கள் அச்சப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |