நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 26 பேர் கைது
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 26 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (26) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு(Colombo), கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்
அவர்களில் பங்களாதேஷ் பிரஜைகள் 16 பேரும், பாகிஸ்தான் பிரஜைகள் இரண்டு பேரும், புருண்டி பிரஜைகள் 02 பேரும், இந்தியா, பிலிப்பைன்ஸ், உகண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி நாடுகடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |