கிழக்கு மாகாணத்தின் சேவைகளைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (13) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
அபிவிருத்திக்கு பாராட்டு
இதேவேளை கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்துவரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த 11ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |