சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை! வரிகளை உயர்த்தும் சிறிலங்கா அரசாங்கம்! நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விஜித ஹேரத், புதிய வரிகளை அறிமுகம் செய்தல், வெட் வீதம் உட்பட ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பது, ரூபாயை மிதக்கச் செய்தல் மற்றும் அரச அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளாகும் என மேலும் குறிப்பிட்டார்.
திட்டங்களை ஆதரிக்க முடியாது
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளையும் அதிகரித்துள்ளது.
அரச அமைப்புகளை தனியார் மயமாக்குவதையும், மக்கள் மீது சுமத்தப்படும் திட்டங்களையும் ஆதரிக்க முடியாது.
வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாங்கம் மக்களின் நல்வாழ்வுக்காக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.