வேலையில்லா பட்டதாரிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இதுவரை நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது,
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
நிரந்தர வேலை

அதேவேளை, தற்போது வேலையில்லாமல் இருக்கும் 461 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் தற்போது பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த நபர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவது குறித்து அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
22 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        