சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பகுப்பாய்வு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது, இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டன.
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன் சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும், பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
