இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நற்செய்தி
பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் (Krishna Srinivasan) இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விஜயம்
அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சந்திப்புகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, கடந்த 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
அதன்போது, கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |