ஐ எம் எப் இரண்டாம் கட்ட நிதியுதவி : மத்திய வங்கி ஆளுநரின் நம்பிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாணய சபை மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொள்கை வட்டி வீதங்களை குறைத்ததன் பலனை உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் கடன் விகிதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |