அநுர அரசாங்கத்தில் ஐந்தாவது மதிப்பாய்வு! ஒப்பந்தத்தை எட்டிய IMF
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அதன்படி, IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் சீர்த்திருத்த திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
IMF நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சமீபத்திய பெரிய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளை செயற்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழு செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது.
இலங்கை அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மீட்சியைத் தொடர்ந்து ஆதரித்துள்ளன என்றும், பணவீக்கம் இலக்கை நோக்கி முன்னேறுதல், இருப்புக்கள் குவிதல் மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் வருவாய் திரட்டல் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாகச் செயற்பட்டன என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சீர்திருத்தங்களை மேம்படுத்துவது, மக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், மீட்சியை நிலைநிறுத்துவதற்கும், நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில் வெளிப்புற அதிர்ச்சிகளை சிறப்பாகத் தாங்க இலங்கையை தயார்படுத்துவதற்கும் முக்கியமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
