அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்: அந்நாட்டு அரசின் அதிரடி தீர்மானம்
அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த தீர்மானத்தினால் 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகளுக்கு மட்டுமே நாட்டிற்க செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
அத்தோடு, வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
குடியேறுபவர்களின் எண்ணிக்கை
அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது வருவதாகவும் அதன் காரணமாக அந்நாட்டில் இருப்பிட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளாரி ஓ'நீல் 10 ஆண்டு குடியேற்றத் திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 510,000 பேர் வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |