இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி

Sri Lanka China
By Dharu Sep 01, 2026 09:30 AM GMT
Report

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகள்  குறித்த அறிக்கையில் இந்த விடயம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகள்

இந்த திட்டத்தின் அடிப்படை  நோக்கங்களாக, இரு நாடுகளின் நிறுவனத் தலைவர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர விஜயங்களை எளிதாக்குதல், எல்லை பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான அதிகாரப்பூர்வ மற்றும் உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளுதல், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள இரு நாட்டு குடிமக்களின் விசா, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பணிகளை மேலும் விரைவுபடுத்தி சுமுகமாக்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கை - சீனா இடையே குடிவரவு கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு: அமைச்சரவை அனுமதி | Immigration Control Cooperation Srilanka China

மேலும்,  சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ஆள் கடத்தல், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல், குடிவரவுத் துறை அதிகாரிகளின் அறிவு, தொழில்முறை நுணுக்கங்கள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு ஆவணத்திற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை தங்களது சட்டபூர்வ அனுமதியை (Clearance) ஏற்கனவே வழங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த விசேட முன்மொழிவுக்கு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்

நல்லூர் ஆலய சூழலில் ஏலம் விடப்பட்ட கடைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016