படித்தவர்களால் திணறும் அநுர அரசு : பொருளாதாரத்திற்கு விழப்போகும் பாரிய அடி
கல்வி கற்ற திறமையான தொழில் வல்லுநர்களை அரசியலில் உள்வாங்குவதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசிடம் அச்சம் காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி (M. Ganeshamoorthy) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வி கற்ற திறமையான தொழில் வல்லுநர்களை அரசியலில் உள்வாங்கினால் தம்முடைய இயலாமை வெளிபட்டு விடுமோ என அநுர அரசு அச்சத்தில் உள்ளது.
தற்போது, அநுரவிடம் உள்ள எந்தவொரு உறுப்பினர்களுக்கும் சர்வதேச அனுகுமுறை சுத்தமாக கிடையாது, இந்தநிலையில் சர்வதேச அனுகுமுறையின் அனுபவம் உள்ளவர்களை உள்வாங்குவதில் என்ன தவறு ?” என அவர் கேள்ளியெழுப்பியுள்ளார்.
மேலும், அநுர அரசாங்கத்தின் கற்போதைய நிலை, நாட்டின் பொருளாதாரம், நாட்டின் எதிர்கால அரசியல் சூழ்நிலை மற்றும் அநுர அரசாங்கம் எதிர்நோக்கப்போகும் சிக்கல்கள் தொடர்பில் விரிவாக அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)