அநுரவின் அரசியல் ஆட்டத்தில் குறுக்கிடும் சர்வதேச நாடுகள் : மீண்டும் அடிவாங்குமா இலங்கை பெருளாதாரம் !
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசியல் எதிர்காலத்திற்கு அமெரிக்கா (America), இந்தியா (India) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகள் பெரும் ஆபத்தாக அமையப்போவதாக பிரித்தானியாவின் (Britain) மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் (Arun Gananathan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலய போராட்டத்தை மனதில் வைத்து கொண்டு பொருளாதாரக் கொள்கைக்காக அநுர மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கையின் பொருளாதாரமானது வல்லரசு நாடுகளின் கையில் தங்கி இருப்பதனால் அவற்றுடன் ஒத்துப்போனால் மாத்திரமே அது அநுரகுமார திஸாநாயக்கவாக இருக்கட்டும் அல்லது எந்தவொரு அரசியல் தலைவாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு சார்பாக அமையும்.
அத்தோடு, மனித உரிமைகள் விடயத்தில் அநுர ஆட்சியில் பாரிய மாற்றம் ஏற்படுமாக இருந்தால் அது அனைத்து நாட்டிலும் ஆதி தஞ்சம் கோரி இருக்கின்ற ஈழத்தமிழர்களின் வழக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவின் அகதி தஞ்சக் கோரிக்கையாளர் விடயம், குடிவரவு குடியகல்வு நடவடிக்கை மற்றும் இலங்கையின் ஆட்சி மாற்றம் சர்வதேசத்தோடு நகரும் விதம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |