எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்!

Jaffna Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Northern Province of Sri Lanka Weather
By Shadhu Shanker Sep 19, 2023 01:12 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(19) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது, ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கின்ற வடக்குக் கிழக்கு பருவப்பெயர்ச்சி மழைக்குப் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்! | Impact Of The Disease Throughout Sri Lanka

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் வரை ஊடுருவி சென்ற தியாக தீபம் திலீபன் பேரணி : ஆளுநர் விடுத்த பணிப்புரை

வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை 

பொதுவாக யாழ்.மாவட்டத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்த பின்னர் ஒக்டோபர், நவம்பர் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய ஐந்து மாதங்களில் பொதுவாக டெங்கு நோயின் பரவல் அதிகமாக இருக்கும்.

இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் இன்று வரையில் யாழ் மாவட்டத்தில் 1836 நோயாளர்கள் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டு இருக்கின்றார்கள், இதில் ஒரு இறப்பும் ஏற்பட்டிருக்கின்றது.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்! | Impact Of The Disease Throughout Sri Lanka

இந்த வருடத்தில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டு இருந்தார்கள்.

பின்னர் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஏறத்தாழ 120, 130 நோயாளர்கள் தான் இனங்காணப்பட்டு இருக்கின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த நோய் இங்கு கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

டெங்கு நோயின் தாக்கம்

கடந்த வருடம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3460 நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் 10 இறப்புகளும் இடம்பெற்றிருந்தன, எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது.

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

வவுனியா பல்கலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன்

எனவே இந்த வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்து இருக்கின்ற காரணத்தினால், நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தி இருக்கின்றோம்.

அதனை ஒருங்கிணைக்கின்ற வகையிலே மாவட்ட மட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி யாழ் மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் டெங்கு தடுப்பு செயலணி கூட்டம் இடம்பெற்று இருந்தது.

டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக 

இந்தக் கூட்டத்தின் போதே இந்த இரண்டு வாரங்களையும் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனம்! | Impact Of The Disease Throughout Sri Lanka

இந்த வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு செயலணி கூட்டங்கள் பிரதேச செயலாளர்கள் தலைமையில் இடம்பெறும்.

இந்தக் கூட்டத்தின் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் எவ்வாறு இந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

இதற்கு அடுத்த கட்டமாக இந்த வாரத்திலே கிராமிய மட்ட டெங்கு தடுப்பு செயலணி கூட்டங்கள் இடம் பெற்று கிராம மட்டத்தில் எவ்வாறு இதனை கட்டுப்படுத்துவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

இந்த இரண்டு வாரத்திலும் பொதுமக்கள் இந்த நுளம்பு உற்பத்தியாகின்ற இடங்களை சிரமதானத்தின் மூலம் சுத்திகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தீயினால் எரிந்து நாசமாகிய வீட்டிற்கு பதில் புதிய வீடு: பிரசன்ன ரணதுங்க எடுத்த முடிவு

தீயினால் எரிந்து நாசமாகிய வீட்டிற்கு பதில் புதிய வீடு: பிரசன்ன ரணதுங்க எடுத்த முடிவு

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024