அரச தலைவரது பதவி நீக்கம் - சுமந்திரன் வெளியிட்ட பதிவு
Twitter
TNA
Gotabaya Rajapaksa
M. A. Sumanthiran
Sri Lankan political crisis
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதாயின், ஒரு வருட காலம் எடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
அரச தலைவரது பதவி நீக்கம் தொடர்பில் டுவிட்டர் தள பயனாளியின் கேள்விக்கு, சுமந்திரன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
குறித்த பதிவில்,
“அரச தலைவரை பதவி நீக்கம் செய்ய, எந்த அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
குற்றச்சாட்டுகள் உண்மையென உச்ச நீதிமன்றம் கண்டறிந்தால், அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதன் பின் பதவி நீக்கம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அரச தலைவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை” என அவர் பதிவிட்டுள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி