கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
தற்போதைய எரிபொருள் நெருக்கடியினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான வசதிகள் இல்லாத கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவ திகதிக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமென மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர்கள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
வீட்டில் பிரசவம் செய்வது தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வீடுகளில் பிரசவிப்பது அதிகரித்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் மற்றும் பணப்பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.