எரிபொருள் நெருக்கடி -வீடுகளில் அதிகரித்துள்ள பிரசவம்
Sri Lanka
Pregnancy
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
வீடுகளில் பிரசவம்
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வீடுகளில் பிரசவிப்பது அதிகரித்துள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வைத்தியசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் மற்றும் பணப்பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
நலமுடன் தாய்,சேய்
கடந்த இரண்டு நாட்களாக நிக்கவெரட்டிய, பேட்ட, மோதர உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தாய்மார்கள் மற்றும் சிசுக்கள் நலமுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.