வீட்டிலேயே பிரசவத்திற்கு தயாராக இருங்கள் - கர்ப்பிணி தாய்மாருக்கு வெளியான அறிவிப்பு
எரிபொருள் நெருக்கடி நிலை
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவிக்கையில்,
வீட்டிலேயே பிரசவம்
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் உரிய நேரத்திற்கு அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதி
தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதியையும் அதிகாரத்தையும் இலங்கை மருத்துவ சபை தமக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.