விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒத்தது அநுர அரசு - சீறும் நாமல்
தற்போதைய அரசின் கொள்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் சிந்தனையுடன் ஒத்ததாக இருப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
தனது இங்கிலாந்து பயணத்தின் போது கேம்பிரிட்ஜ் யூனியன் அமைப்பில் நடைபெறவிருந்த உரை ரத்து செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் சிந்தனை ரீதியாக செயற்பட்டு வருவதாகக் கூறினார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் வர வேண்டாம்
இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உள்ளிட்ட பகுதிகளில் தனிமாநில கோரிக்கையை ஆதரிப்போர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை மேற்கோள் காட்டிய அவர் அரசின் சிந்தனைத் திசை குறித்து கேள்வி எழுப்பினார்.
தெற்கிலுள்ள புத்த மதத்தவர்கள் அநுராதபுரம் வழியாகச் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்ற கருத்து கவலைக்குரியது என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரிட்டனுக்கு செல்லும் நிலையில் அங்குள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் வர வேண்டாம் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |