அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர்

Jaffna Ramanathan Archchuna Sri Bavanandarajah
By Kajinthan Feb 21, 2026 02:57 PM GMT
Report

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் யார் யார் எங்கு அமர வேண்டும் என்பது பற்றிய நெறிமுறையை பற்றி பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 நேற்றையதினம்(21) நடைபெற்ற பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையாக நடந்தது என்ன

கடந்த, சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் ஆசனத்துக்கு சண்டையிட்டதாக கூறுகின்றார். ஆனால் உண்மையாக அங்கு நடந்த விடயம் அதுவல்ல. எனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழு தலைவரின் முகம் எனக்கு தெரியாது. ஆகையாலேயே ஆசனத்தை மாற்றி தருமாறு கூறினேன். பிரதேசத்தின் முதற் குடிமகன் தவிசாளரே.

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர் | Archuna Mp Sits On The Opposition Seat

சுற்றுநிருபத்தின்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்த பிரதேசத்தின் தவிசாளர் ஆகியோரே முன்னால் அமர வேண்டும். இந்த நடைமுறை சிங்கள இடங்களில் உள்ளன. ஆனால் தமிழர் பகுதிகளில் அது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கவில்லை. தமிழ் கட்சிகளின் ஆட்சியே காணப்படுகின்றது.

பிரச்சினை எழுந்தவுடன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எனக்கான ஆசனத்தை தனக்கு அருகே வழங்கினார். அவர் வழங்கியதால் நானும் அங்கு சென்று அமர்ந்தேன். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னை அவ்விடத்தில் இருந்து அகற்றும்படி காவல்துறைக்கு உத்தரவிடுகின்றார். அதனை கேட்டு காவல்துறையினரும் பாய்ந்து எழும்பி வருகின்றார்கள். காவல்துறையினர் எழும்பி வருகின்றார்கள் என்றால் நான் யாருக்காவது அடிக்க போனேனா அங்கு?

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே!

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் எங்கே!

ஒருங்கிணைப்பு குழு தலைவரை காப்பாற்றிய அர்ச்சுனா

அன்றையதினமே சிறிது நேரத்தின் பின்னர் காவல்துறைக்கு உத்தரவிட்டது குறித்து அர்ச்சுனாவை கேட்டிருந்தால் அவர் கூறியிருப்பார் அப்படி நான் எதுவும் செய்யவில்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. அவர் காலை ஒரு கதை கதைப்பார், மாலை ஒரு கதை கதைப்பார், அடுத்த நாள் ஒரு கதை கதைப்பார். அது அவரது பழக்கதோசம்.

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர் | Archuna Mp Sits On The Opposition Seat

அன்று நடைபெற்ற சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் பல கேள்விகளை கேட்டேன். அத்தனை கேள்விகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜாவை காப்பாற்றினார்.

மழுப்பலாக பதிலளித்த ஸ்ரீபவானந்தாராஜா எம்.பி

டித்வா புயல் காலப்பகுதியில் இளவாலை பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தாராஜா அங்கு நிலைமைகளை பார்வையிட்டு விட்டு, உரிய இடங்களுக்கு கடிதம் அனுப்புவதாக மழுப்பும் வகையில் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் என்னை அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்று அவர்களுக்கு தீர்வு கூறினேன். அந்தவிடயம் பற்றி நான் கூட்டத்தில் கதைத்தவேளை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை அர்ச்சுனா காப்பாற்றினார்.

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர் | Archuna Mp Sits On The Opposition Seat

மாதகலில் உள்ள நரியோடை வீதியானது அரச நிதி ஒதுக்கீட்டில் 2.4 மில்லியன் ரூபா செலவழித்து புனரமைப்பு செய்யப்பட்டது. அது வெள்ளம் ஓடுகின்ற பாதை. அந்த வீதியில் ஓடுகின்ற வெள்ளம் தடைப்பட்டு காணப்பட்டது. இதுகுறித்து நான் அன்றைய கூட்டத்தில், அரசின் பெரியாழ்வார் நிதியை பெற்று அதனை சீர்செய்ய வேண்டும் என பேசியபோது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறுக்கிட்டு அந்தளவுக்கு நிதி இல்லை என கூறி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை காப்பாற்றினார்.

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பிரஜா சக்தியின் தேவை என்ன 

 கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்திய பின்னர் பிரஜா சக்தியின் தேவை என்ன என கேள்வி எழுப்பினேன். இதன்போதும் குறுக்கே பாய்ந்து அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை அர்ச்சுனா காப்பாற்றினார்.

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர் | Archuna Mp Sits On The Opposition Seat

நாடாளுமன்ற குழு தலைவர் அன்று வெறும் பொம்மையாகவே இருந்தார். ஒரு பதிலும் சொல்லவில்லை. காவல்துறைக்கு அர்ச்சுனா உத்தரவிட்டு அவர்கள் எழும்பியபோதும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிரித்துக்கொண்டு இருந்தார். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஒருமுறைதான் வாய் திறந்தது எனக்கு தெரியும், அதாவது நான் கோபப்பட்டு வெளியே செல்ல முயன்றவேளை நீ போடா என்று சொன்னார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார், இராணுவத்தை அழைப்பார். அன்றுகூட காவல்துறைக்கு உத்தரவு போட்டீர்களா என்று ஒரு மணிநேரத்தின் பின் கேட்டால் இல்லை என்று சொல்லி இருப்பார். ஏனென்றால் அவர் காலை ஒன்று பேசுவார், மாலை ஒன்று பேசுவார், அடுத்தநாள் ஒன்று பேசுவார். என்ன பேசுகின்றேன் என்றுகூட அவருக்கு தெரியாது. இதைதான் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறேன் என்றார்.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026