தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Erimalai Feb 21, 2026 07:16 AM GMT
Report

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளை அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர். குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர். இதனால் வடமராட்சி கிழக்கில் உள்ள பல உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்


மதில்களுக்கு சேதம்

இந்நிலையில் இன்று (20) உடுத்துறை வேம்படி பகுதியில் எந்த வித அனுமதியும் இன்றி அப்பகுதி மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல் வழங்கப்படாமல் கனரக இயந்திரங்களை கொண்டு மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் குடி நீர் குழாய் அமைப்பதற்கு பாரிய பள்ளம் தோண்டியுள்ளனர்.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம் | Improper Operation Of Freshwater Project Company

வெளியில் சென்ற அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பவம் அறிந்து தமது வீட்டை வந்து பார்வையிட்ட போது சுற்று மதில்கள் சேதமடைந்துள்ளதுடன்,வெடிப்பு விழுந்து காணப்படுவதால் சுற்று மதில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் கோபமடைந்த மக்கள் முன் அறிவிப்பு இன்றி குறித்த வேலையை செய்ததால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் கோரிக்கை

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கான நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பரிதாவின் மேற்பார்வையில்தான் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம் | Improper Operation Of Freshwater Project Company

இதேபோன்று பல உள்ளக வீதிகள் குழாய் அமைப்பதற்காக நன்னீர் திட்ட நிறுவனத்தால் தோண்டப்பட்டு உரிய முறையில் புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால் வடமராட்சி கிழக்கில் அனைத்து இடங்களிலும் இவர்கள் சேதப்படுத்திய வீதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள்

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள்

ஊடக அடையாள அட்டை விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு

ஊடக அடையாள அட்டை விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026