குவைத் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்: இரு இத்தாலியர்கள் உயிரிழப்பு
குவைத் மீது ஈரான் இன்று (26) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலியப் பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் ANSA செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள தகவல்களின்படி, குவைத்திலுள்ள ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பாக குவைத் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகையில், இந்தத் தாக்குதலில் இத்தாலியப் பிரஜைகள் இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குவைத் பாதுகாப்பு அமைச்சு
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காயமடைந்த ஏனைய இருவரும் குவைத் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமது வான்பரப்பிற்குள் நுழைந்த பல ட்ரோன்களை அடையாளம் கண்டு, அவற்றை முறியடிக்கப் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக குவைத் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக குவைத் வான்பரப்பை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐரோப்பாவிலிருந்து ஈராக் ஊடாக வளைகுடா பிராந்தியத்திற்குப் பயணிக்கவிருந்த பல விமானங்களின் பயணப் பாதைகளை மாற்ற வேண்டி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |