இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Janatha Vimukthi Peramuna Eastern Province Northern Province of Sri Lanka NPP Government
By Independent Writer Feb 21, 2026 09:12 AM GMT
Report

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கீழ் உள்ள வடக்கு மாகாண சபைக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக நியமித்தமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்த ஜேவிபியினர் தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள்.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

பதில் கிடைக்கவில்லை

அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கு மாகாண சபையை அதிகாரம் உள்ள ஒரு சபையாக செயற்படுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது தெரிந்த விடயம்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபின் மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளி விவகார அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன் இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Jvp Split The United North And East Provinces

ஒரு மாகாண சபை வினைத்திறனாக செயற்பட வேண்டுமானால் 160 நியதி சட்டங்களை உருவாக்க வேண்டும். இலங்கையில் அவ்வாறு எந்த மாகாணமும் உருவாக்கவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் 25க்கு குறைவான நியதிச் சட்டங்களையே உருவாக்க முடிந்தமை துரதிஷ்டவசமான சம்பவமாக இருந்தாலும் அதற்கு அந்தந்த மாகாணங்களில் இருந்த ஆளுநர்கள் காரணமாக இருந்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் ரணில் விக்ரமசிங்க காலத்தில் மாகாண சபை முறை தொடர்பில் ஆலோசனை வழங்கும் குழுவில் நான் அங்கம் வகித்தேன்.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை தடுத்து நிறுத்த வேண்டும் : இந்தியாவிடம் கோரிக்கை

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை தடுத்து நிறுத்த வேண்டும் : இந்தியாவிடம் கோரிக்கை

அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் கொழும்பில் சந்தித்தபோது மாகாணங்களில் இருந்து மீள மத்திக்கு பெறப்பட்ட அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அவர் நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதற்கு பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் அவருடைய காலத்தில் அதனை நிறைவேற்ற முடியாமல் போனது.

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Jvp Split The United North And East Provinces

தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு கூட விருப்பமில்லாதவர்களாக இருப்பது மாகாண சபை தேர்தல் ஒன்றை நடத்துவார்களா என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

மாகாண சபை தேர்தலை நடாத்த விருப்பம் இல்லாத காரணத்தினால் வடக்கு மாகாணத்துக்கு தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நிழல் அமைச்சர்களாக உத்தியோகபற்றற்ற முறையில் செயற்படுத்தப் பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு நன்கு தெரியும் நிழல் அமைச்சர்களை சட்டரீதியாக நியமனம் செய்ய முடியாது. அத்தோடு ஒரு மாகாணத்திற்கு ஒரு வகையிலும் இன்னொரு மாகாணத்துக்கு வேறு வகையிலும் செயற்படுத்த முடியாது என்பது நன்கு தெரியும்.

ஆகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியினர் மாகாண அதிகாரங்களை வழங்காது தமது கட்டுப்பாட்டில் மாகாண நிர்வாகங்களை நடத்துவதற்கு எத்தணிப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

செய்தி - பு.கஜிந்தன், லின்ரன்

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வரலாற்று பயணம்! 14,775 கடல் மைல்களை கடக்கும் P628

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026