கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
Colombo
People
SriLanka
National Water Supply
Water supply barrier
By MKkamshan
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகமானது தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, கோட்டை, கடுவெல, தெஹிவளை மற்றும் கல்கிசை நகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம , பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை நகர சபைக்குட்பட்ட பகுதி மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு (26) நேற்று இரவு 9 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி