கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் இவ்வாண்டுக்கான கல்வி செயற்பாடுகள் திட்டமிட்டபடி முழுமையாக இடம்பெற முடியாமல் உள்ளது.
இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பரில் வழமையாக வழங்கப்படும் தவணை விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும் இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் போது மட்டும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

