நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
எரிவாயு விநியோகம், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எரிபொருள் விநியோகம், எரிவாயு வாயு விநியோகம் தொடர்பான முறைகேடுகள் இருந்தால், 0711691691 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் இன்று காலை பல முறை தொடர்பு கொண்ட போதிலும் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் மக்களுக்குப் பிரச்சினைகளைக் கூற தொலைபேசி இலக்கத்தை அறிவித்து, அது சம்பந்தமான அழைப்புகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காமல் இருப்பதால் என்ன பயன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


