செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தமைக்கான ஆதாரம்: நாசா வெளியிட்ட அறிவிப்பு

NASA World Technology
By Shalini Balachandran Sep 12, 2025 08:59 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

செவ்வாய் கிரகத்தில் பண்டையகாலத்தில் வாழ்ந்த உயிரினம் ஒன்றின் தடயம் கிடைத்துள்ளது என நாசா அறிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் ( Nasa's Rover), செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வறண்ட நதிப்படுகையில் பண்டையகால நுண்ணுயிரிகளின் வாழ்க்கைத் தடயங்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியமான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஆய்வில் நேரடியாக ஈடுபடாத விஞ்ஞானிகளான ஜேனிஸ் பிஷப் (SETI Institute) மற்றும் மாரியோ பேரென்டே (University of Massachusetts Amherst) ஆகியோர், உயிரினங்கள் அல்லாத பிற இயற்கையான செயல்முறைகளும் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழு நாட்டுக்கும் போதைப்பொருள் விநியோகம்! ராஜபக்சர்களுடைய முன்னாள் சகாவின் அதிர்ச்சி பின்னணி

முழு நாட்டுக்கும் போதைப்பொருள் விநியோகம்! ராஜபக்சர்களுடைய முன்னாள் சகாவின் அதிர்ச்சி பின்னணி

உயிரினங்கள் 

பெர்சவரன்ஸ் ரோவர் 2021 ஆம் ஆண்டு முதல் செவ்வாயில் சுற்றி வருகின்றது. இதனால் நேரடியாக உயிரினங்களைக் கண்டறிய முடியாது என்பதால் அதற்குப் பதிலாக, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களாகக் கருதப்படும் பாறைகளில் துளையிட்டு, மாதிரிகளைச் சேகரிக்கின்றது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தமைக்கான ஆதாரம்: நாசா வெளியிட்ட அறிவிப்பு | Nasa Finds Possible Life Signs On Mars

இந்தநிலையில், ஜோயல் ஹுரோவிட்ஸ் (Stony Brook University) தலைமையிலான குழுவினர், நெரெட்வா வால்லிஸ் (Neretva Vallis) என்ற நதிப் படுகையில் உள்ள பிரைட் ஏஞ்சல் (Bright Angel) என அழைக்கப்படும் பாறை அமைப்பில் இருந்து இந்த மாதிரியை சேகரித்துள்ளனர்.

இந்த மாதிரியில் உயிரினங்கள் உருவாவதற்குத் தேவையான கரிம கார்பன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு

நுண்ணுயிரிகள் 

அத்தோடு, இரும்பு பாஸ்பேட் மற்றும் இரும்பு சல்பைட் நிறைந்த சிறிய புள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தமைக்கான ஆதாரம்: நாசா வெளியிட்ட அறிவிப்பு | Nasa Finds Possible Life Signs On Mars

பூமியில், நுண்ணுயிரிகள் கரிமப் பொருளை உண்ணும்போது இந்த இரசாயன கலவைகள் துணை விளைபொருட்களாக உருவாகின்றன.

இது உயிரினங்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் என உடனடியாக கூற முடியாது எனவும் நுண்ணுயிர் வாழ்க்கைக்கு சாத்தியமான விளக்கம் மட்டுமே என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

முஸ்லிம் மக்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

ஆராய்ச்சியாளர்

நாம் காணும் அம்சங்களை உருவாக்க வேறு வழிகளும் இருக்கக்கூடும் என்று முன்னணி ஆராய்ச்சியாளரான ஜோயல் ஹுரோவிட்ஸ் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தமைக்கான ஆதாரம்: நாசா வெளியிட்ட அறிவிப்பு | Nasa Finds Possible Life Signs On Mars

இருப்பினும், இதுவரையிலான தேடல்களில், பண்டைய கால வாழ்க்கையின் அறிகுறிகளுக்கான மிகவும் உறுதியான மற்றும் வலுவான ஆதாரம் இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த விஞ்ஞானி ஜோயல் ஹுரோவிட்ஸ், உயிரினங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வேறு சில இயற்கை நிகழ்வுகளாலும் இது ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024