திருகோணமலை விவகாரத்தில் பிக்குகளின் கட்டுக்கதையை உடைக்கும் முக்கிய ஆவணங்கள்!
திருகோணமலையில் நடந்த சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியாக தெரிவித்திருந்தார்.
என்றபோதிலும் கூட இந்த திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு முடிவு கிடைத்ததாக தெரியவில்லை.
ஒருபுறம், புலம்பெயர்த் தமிழர்களின் வேண்டுகோள் காரணமாகவே இவ்வாறு ஜனாதிபதி குறித்த பிரதேசத்தில் இருந்து புத்தர் சிலையை அகற்றியுள்ளதாக தேரர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை, அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இந்த திருகோணமலை விவகாரம் என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
நாளை (21.11.2025) நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணியை தடுக்கவே இவ்வாறு திருகோணமலை சம்பவம் அரங்கேறியதாக நாமல் ராஜபக்ச தரப்பு குற்றம்சுமத்தி வருகிறது.
எனினும், இவ்விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (18.11.2025) திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதி, திருகோணமலை சம்பவம் தொடர்பில் பதிலடி வழங்கும் விதமான பல கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
இவை உள்ளிட்ட திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு...........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |