முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தம் இன்று (10) முற்பகல் 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது இன்று மாலை முல்லைத்தீவுக்கு அருகில் கடற்கரையை கடந்து நகர வாய்ப்புள்ளது, நாளைக்குள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பலத்த காற்று வீசும்
அதன்படி, வடக்கு மாகாணத்தில், மணிக்கு 50-60 கி.மீ முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தளம், மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் கனமழை
இதே நேரத்தில், வடக்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு மாகாணம் மற்றும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |