அநுரவுக்கு டக்ளஸின் நன்றியும் டயஸ்போரா தமிழர் மீதான தடையும்
இலங்கையில் என்னதான் காலநிலை சீர்கேடுகள் வந்தாலும் மழைக்கால இருட்டானாலும் கொப்பிழக்கப்பாயாத மந்தி பாணியில் பாதாள உலககாரர்களின் கைவரிசைகளும் சட்டவிரோத துப்பாக்கிகளின் வேட்டுக்களும் ஒலிகளும் வருகின்றன.
இதே கொப்பிழக்கப்பாயாத பாணியில் முன்னைய ஆட்சிகளின் பாணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான பயங்கரவாத தடைப்பட்டியலை வர்த்தமானிகளும் வருகின்றன.
இந்ததடை லண்டனில் தமிழ் இளையோர் சிலரால் கசப்பான அனுபவத்தை பெற்ற ரில்வின் சில்வாவின் பழிவாங்கல் எதிர்வினை என்ற கிசுகிசுப்புகளும் உள்ளன.
இதற்கிடையே சட்டவிரோத துப்பாக்கி வேட்டுக்கள்; தொடர்ந்தும் ஒலித்தாலும் தனக்கு ஒருகாலத்தில் சிறிலங்கா படைத்துறையால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று எவ்வாறு பாதாள உலக கும்பலுக்கு சென்றது என்ற விடயத்தில் சிஐடியினருக்கு துல்லியமான பதிலை வழங்கினாரோ இல்லையோ ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா நேற்று பிணையில் வெளியே வந்தார்.
அப்படி வெளியே வந்த ஜனாதிபதி அநுரவுக்கு மறக்காமல் தனது நன்றியை தெரிவித்து நடையை கட்டினார்.
இந்த பிணை விடுதலை பலரும் கருதுவதுபோல இலங்கையின் சுயாதீன நீதித்துறையால் வழங்கப்பட்டால் ஏன் அநுரவுக்கு நன்றி சொல்லப்படவேண்டும் என்ற வினா பலமாக இடிக்கும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |