யாராக இருந்தாலும் மரண தண்டனை! கட்டுப்பாட்டை மீறிய ஈரான் போராட்டம்
ஈரானில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளின் எதிராக பரிசீலனை செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மரண தண்டனைக்கான குற்றச்சாட்டு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.
கட்டுப்படுத்த நடவடிக்கை
வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
மேலும், ஈரான் முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டங்கள் 2 வாரத்திற்கு மேல் நடைபெறுவதால், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒடுக்கு முறையை கையாள இருப்பதாக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சூசகமாக தெரிவித்திருந்தார்.
நீதித்துறை தலைவரும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
பொருளாதாரத் தடை
இதனால் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள பின்னணியில் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் அந்நாட்டு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |