வெளிநாடொன்றில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.
சுனாமி அலை
இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்ப்டுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று பி.எம்.கே.ஜி தெரிவித்துள்ளது.
சுலவேசி தீவின் வடக்கு முனையில் உள்ள மனாடோவில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தை பலமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |