அதிபர் ரணிலுக்கு வந்த முக்கிய செய்தி
ஐஸ்லாந்து மற்றும் இலங்கை மக்கள்
ஐஸ்லாந்து மற்றும் இலங்கை மக்கள் நல்லுறவைக் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றத் திட்டங்களை அதிகரிப்பதன் மூலம் இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க நன்மைகளை அனுபவிக்க முடியும் என்றும் ஐஸ்லாந்து அதிபர் குயோனி ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்லாந்து அதிபர், ரணில் விக்கிரமசிங்க அதிபராக பதவியேற்றதையடுத்து அவருக்கு விசேட வாழ்த்துச் செய்தி அனுப்பிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்
சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதன் மூலம் பொருளாதார சவால்களை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அனுபவிக்கும் உயர் பணவீக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில், பணவீக்கம் என்பது ஐஸ்லாந்தும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும்.
சமீபத்திய தொற்றுநோய்கள் மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் ஐஸ்லாந்து அதிபர் எடுத்துரைத்துள்ளார்.
