கனேடிய மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
கனடாவில் (Canada) இணையவழி மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் பொருட்களை இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மறைமுகக் கட்டணங்கள்
விபரங்கள் வெளியிடப்படாத கட்டணங்கள் அல்ல மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் அறவீடு செய்யப்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணைய வழியிலான விற்பனையின் போது மறைமுகமாக கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் போன்ற சில வகைக் கட்டணங்களே இவ்வாறு மறைமுகக் கட்டணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
கட்டண அறவீட்டு முறைமை
மேலும், பொருள் அல்லது சேவைக்கான விலைக்கு மேலதிகமாக வேறு மறைமுகக் கட்டணங்கள் திடீரென சேர்க்கப்பட்டால் அது சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டண அறவீட்டு முறைமை குறித்து அறியத் தருமாறு வாடிக்கையாளர்களிடம் கனேடிய வியாபார போட்டி முகவர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |