பால்மா இறக்குமதிக்கு தடை? வெளிவந்த அறிவிப்பு
பால் மா இறக்குமதியை நிறுத்தப் போவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதியமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செலவினத் தலைப்புகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் அறுபது வீதமான பால் மா இறக்குமதி செய்யப்படுகிறது, உற்பத்தி அதிகரித்தால் இறக்குமதியை குறைக்க முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் தெரிவித்ததாக அவர் கூறினார்.
நாட்டு மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அரசாங்கத்தின் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதை அரச தலைவர் நிறுத்தியுள்ளதாகவும் சில அமைச்சர்கள் தற்போது பஸ்களில் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுதான் இரண்டு அரசாங்கங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் அவர் கூறினார்.